Date:

வாக்காளர்களாக பதிவு செய்துகொள்ள வீட்டு உரிமையாளர்களின் அனுமதி தேவையில்லை – தேர்தல்கள் ஆணைக்குழு

வாக்காளராக பதிவுசெய்துகொள்வதற்கு வீட்டு உரிமை தேவையில்லை. இந்த காரணங்களால் இதுவரை வாக்காளர்களாக பதிவு செய்துகொள்ள முடியாமல் போனவர்கள் எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் தங்களை வாக்களர் இடாப்பில் பதிவு செய்துகொள்ளலாம் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2021 ஜூன் மாதம் முதலாம்  திகதிக்கு சாதாரண பதிவு முகவரியில் வாக்கு உரிமையாளராக பதிவு செய்துகொள்வதற்காக தகுதியுடைய அனைத்து பிரஜைகளுக்கும் உரிமை இருக்கின்றது.

வாக்காளராக பதிவு செய்துகொள்வதற்காக 2021 ஜூன் மாதம் முதலாம்  திகதிக்கு சாதாரண பதிவு மாத்திரம் போதுமானது. சொத்துரிமை தொடர்பில் கவனம் செலுத்தப்படமாட்டாது.

வாடகை அல்லது குத்தகை வீடுகள் மற்றும் சட்டவிராேத பதிவாளர்கள் ஏனைய தகுதிகளை பூரணப்படுத்தி இருந்தால், அவர் சாதாரண முகவரியில் வாக்காளராக பதிவு செய்துகொள்ள முடியும். அதற்காக வீட்டு உரிமையாளர்களின் விருப்பம் அல்லது இணக்கம் தேவையில்லை.

பிரஜை ஒருவருக்கு விட்டுக்கொடுக்க முடியாத இறையாண்மை அதிகாரத்துக்கு வாக்களிக்கும் அதிகாரமும் உள்வாங்கப்பட்டிருக்கின்றது. வாக்களிக்கும் அதிகாரத்தை செயற்படுத்துவதற்கு வாக்குரிமை பெயர் பட்டியலில் பெயர் உள்வாங்கப்பட்டிருக்கவேண்டும்.

வாக்காளராக பதிவு செய்துகொள்வதற்காக பிரஜைகளுக்கு தடைகளை ஏற்படுத்துவது நீதிமன்றத்தினால் தண்டம் அல்லது சிறைப்படுத்தல் அல்லது இந்த இரண்டுக்கும் கீழ்படியவேண்டிய குற்றமாகும்.

வாடகை அல்லது குத்தகை வீடுகள் மற்றும் சட்டவிராேத பதிவாளர்கள் வாக்காளராக பதிவுசெய்துகொள்வது, பிரஜைகளின் வாக்குரிமையை உறுதிப்படுத்துவதற்கு மாத்திரமாகும் என அறிவிப்பதுடன் இவ்வாறு பதிவு செய்வது சொத்து உரிமை அல்லது நிரந்தர பதிவை உறுதிப்படுத்துவதற்கு அல்ல என்பதை கருத்திற்கொள்ளவேண்டும்.

இவ்வாறான பிரச்சினை காரணமாக வாக்காளாராக பதிவுசெய்துகொள்வதற்கு முடியாமல்போனவர்கள் யாராவது இருந்தால், 2021,11,17ஆம் திகதிக்கு முன்னர் மாவட்ட தேர்தல் காரியாலயத்தில் உங்களது கோரிக்கையை சர்ப்பிக்க முடியும். உங்களுக்கு தேவையான உரிமை கோரல் பத்திரங்கள் அனைத்து கிராம சேவகர் காரியாலயம், பிரதேச செயலாளர் காரியாலயம் மாகாண காரியாலயங்கள் அல்லது மாவட்ட தேர்தல் காரியாலயங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...