Date:

பயணத்தை இலகுவாக்கப் புதுப்பிக்கப்பட்ட Google Map!!

வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து Google Map A மற்றும் B வீதி வரைபடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தனது X கணக்கில் இட்டுள்ள பதிவில், பிரதான வீதிகளில் 12,000 கிலோமீற்றர் தூரம் வரை கூகுள் வரைபடங்களில் நிகழ்நேரத் தகவல்களை (Real-time information) புதுப்பிக்கப்படுவது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முன்னெடுப்பின் மூலம் பயணிகள் தங்கள் பயணங்களை மிகவும் வினைத்திறனாகத் திட்டமிடுவதற்கு உதவும் வகையில், வீதித் தடங்கள் மூடப்படுதல் மற்றும் கட்டுமான அறிவிப்புகள் உள்ளிட்ட ஆறு வகையான நிலை எச்சரிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அமைச்சரின் X கணக்கில் இடப்பட்டுள்ள பதிவின்படி, இந்தப் புதிய விசேட அம்சமானது பயண தாமதங்களைக் குறைக்கவும், வழித் திட்டமிடலை மேம்படுத்தவும் மற்றும் வீதியைப் பயன்படுத்துவோருக்கான எதிர்பாராத நெரிசலைக் குறைக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைய புதுப்பித்தலை தங்கள் கூகுள் வரைபடச் செயலியைப் (App) பரிசோதித்து, பயணிக்கும் போது மேம்படுத்தப்பட்ட தரவுகளைப் பயன்படுத்துமாறும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இத்திட்டம் டிசம்பர் 31 ஆம் திகதி வரை ஒரு முன்னோடித் திட்டமாக முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நுவரெலியாவிலிருந்து கொழும்பு சென்ற மரக்கறி மலை!

கொழும்பில் ஏற்பட்ட பெரும் தேவையைத் தொடர்ந்து, நேற்று நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து...

16 ஆம் திகதி ஆரம்பிக்க முடியாத பாடசாலைகள்!

16 ஆம் திகதி ஆரம்பிக்க முடியாத பாடசாலைகளின் பட்டியல் இதோ.. ...

இலங்கை வந்த ரஷ்யா உதவி விமானம்!

நாட்டைப் பாதித்த சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட இலங்கைப் பொதுமக்களுக்கு நிவாரணம்...

பதுளை மாவட்டத்துக்கு எச்சரிக்கை!

பதுளை மாவட்டத்தில் இன்று (09) காலை முதல் மீண்டும் கனமழை பெய்யத்...