நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள அனர்த்த நிலைமையினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 635 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று (08) நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையின்படி, 192 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.
சீரற்ற காலநிலையினால் 512,123 குடும்பங்களைச் சேர்ந்த 1,766,103 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், அங்கு 234 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் 89 மரணங்களும், பதுளை மாவட்டத்தில் 90 மரணங்களும், குருநாகலில் 61 மரணங்களும், கேகாலை மாவட்டத்தில் 32 மரணங்களும், புத்தளத்தில் 37 மரணங்களும் மற்றும் மாத்தளை மாவட்டத்தில் 28 மரணங்களும் பதிவாகியுள்ளன.
அத்துடன், 22,218 குடும்பங்களைச் சேர்ந்த 69,861 நபர்கள் தொடர்ந்தும் பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.






