Date:

அபிவிருத்தி செய்யப்படும் ‘களு பாலம’

‘களு பாலம’ என அழைக்கப்படும் பேராதனை மற்றும் சரசவி உயன ரயில் நிலையங்களுக்கு இடையிலான பகுதியில் மகாவலி ஆற்றின் குறுக்கே நிர்மாணிக்கப்பட்டுள்ள ரயில் பாலத்தை இரட்டைப் பாதையாக அபிவிருத்தி செய்ய அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று (08.12.2025) அது தொடர்பான இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“டித்வா” புயலால் ஏற்பட்ட சீரற்ற வானிலையால் கண்டி மாவட்டம் அதிக பாதிப்புக்களை சந்தித்திருந்த நிலையில் குறித்த பாலமும் அதிகளவில் சேதமடைந்திருந்தது.

இதன்காரமணாக, குறித்த பாலத்தைத் திருத்தியமைக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த ரயில் பாலத்தை இரட்டைப் பாதையாக அபிவிருத்தி செய்ய அரசாங்கத்தின் அவதானம் செலுத்தப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று (08.12.2025) மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தலைநகர் டெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல முக்கிய நகரங்கள் இருளில்

இஸ்ரேலின் மின்சாரத் தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் 'ஒரோட்...

எரிபொருள் விலை அதிகரிப்பு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், திடீரென எரிபொருள்...

யோஷிதவுக்கு அதிகுற்றப்பத்திரிகை கையளிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன் யோஷித ராஜபக்ச, தனியார்...

சி.ஐ.டியின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க...