இன்று மாலை 6 மணிவரையான நிலவரப்படி, இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 214 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, நாடு முழுவதும் 43,715 குடும்பங்களை சேர்ந்த 152,537 பேர் 1,211 பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.






