களனி கங்கையின் நீர்மட்டம் தற்போது சிறு வெள்ள மட்டம் வரை குறைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாகலகம் வீதி நீர்மானியில் நீர்மட்டம் இன்று பிற்பகல் 02:00 மணியளவில் 6.9 அடியாக இருந்ததாகவும், பிற்பகல் 03:00 மணியளவில் அது 6.75 அடியாகக் குறைந்துள்ளதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஹங்வெல்ல நீர்மானியில் நீர்மட்டம் இன்று பிற்பகல் 02:00 மணியளவில் 7.14 அடியாக இருந்ததுடன், பிற்பகல் 03:00 மணியளவில் அது 7.07 அடியாகக் குறைந்துள்ளது. எனினும் இது தொடர்ந்தும் அவதான மட்டத்தில் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக களுகங்கை, மல்வத்து ஓயா உள்ளிட்ட நீர்நிலைகளிலும் நீர்மட்டம் குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தந்திரமலை நீர்மானியில் நீர்மட்டம் இன்று பிற்பகல் 02:00 மணியளவில் 8.24 அடியாக இருந்ததுடன், பிற்பகல் 03:00 மணியளவில் அது 8.19 அடியாகக் குறைந்துள்ளது.
எவ்வாறாயினும், மல்வத்து ஓயாவில் தொடர்ந்தும் பெரும் வெள்ள நிலைமை நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.






