மீண்டும் பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதியில் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, தெரிவித்தார்.
டிசம்பர் 16 ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சகம் இதற்கு முன்னர் அறிவித்திருந்தது.
இருப்பினும், நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையுடன் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் திகதியில் ஏதேனும் மாற்றம் இருந்தால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.






