Date:

“சிறையில் இம்ரான் உயிரோடு இருக்கிறார்”

​பாகிஸ்​தான் முன்​னாள் பிரதமர் இம்​ரான் அடிலா சிறை​யில் உயிருடன் இருக்​கிறார். அவரை வெளி​நாடு தப்​பிச் செல்​லும்​படி பாகிஸ்​தான் அரசு அழுத்​தம் கொடுத்து வரு​கிறது’’ என பாகிஸ்​தான் தெக்​ரீக்​-இ-இன்​சாப்​(பிடிஐ) கட்​சி​யின் செனட் உறுப்​பினர் குர்​ராம் ஜீஷன் கூறி​யுள்​ளார்.

பாகிஸ்​தான் முன்​னாள் பிரதமர் இம்​ரான் கான், ராவல்​பிண்​டி​யில் உள்ள சிறை​யில் கொலை செய்​யப்​பட்​டார் என ஆப்​கானிஸ்​தானில் உள்ள சமூக ஊடகங்​களில் கடந்த வாரம் தகவல் பரவியது.

சிறை​யில் உள்ள இம்​ரான் கானை அவரது குடும்​பத்​தினர், அரசி​யல் கட்​சி​யினர் சந்​திக்க கடந்த ஒரு மாதத்​துக்கு மேலாக அனு​மதி அளிக்​கப்​பட​வில்​லை. இதனால் அவரது சகோ​தரி​கள் சிறை வாசலில் போராட்​டம் நடத்​தினர். அவர்​கள் மீது போலீ​ஸார் தாக்​குதல் நடத்​தினர். இம்​ரான் கான் உயிரோடு இருப்​ப​தற்​கான ஆதா​ரத்தை வெளி​யிட வேண்​டும் என அவரது மகன் காசிம் கான் கோரிக்கை விடுத்​தார்.

இந்​நிலை​யில் பிடிஐ கட்​சி​யின் செனட் உறுப்​பினர் குர்​ராம் ஜீஷன், இம்​ரான் கான் குறித்து கூறிய​தாவது: இம்​ரான் கான் அடிலா சிறை​யில் உயிரோடு இருப்​ப​தாக எங்​களுக்கு பாகிஸ்​தான் அரசு உறுதி அளித்​துள்​ளது. அவரை தனிமைச்​சிறை​யில் அடைத்து வைத்​துள்​ளனர். நாட்டை விட்டு வெளி​யேறி, அவருக்கு பிடித்​த​மான இடத்​தில் அமை​தி​யாக இருக்​கும்​படி பாகிஸ்​தான் அரசு அழுத்​தம் கொடுத்து வரு​கிறது. இதற்கு இம்​ரான் கான் ஒப்​புக் கொள்ள மாட்​டார்.

இம்​ரான் கானின் புகழை கண்டு பாகிஸ்​தான் அரசு பயப்​படு​கிறது. அதனால்​தான் அவரது படம் மற்​றும் வீடியோ வெளி​யிட அவர்​கள் அனு​ம​திக்​க​வில்​லை.

கடந்த ஒரு மாத​மாக அவரை குடும்​பத்​தினர் மற்​றும் கட்சி தலை​வர்​கள் சந்​திக்க விடா​மல் அவரை தனிமைச் சிறை​யில் அடைத்து வைத்​திருப்​பது துரஅ​திர்​ஷ்டம். இது மனித உரிமை மீறல். ஏதோ ஒரு விஷ​யத்​துக்​காக அவருக்கு பாகிஸ்​தான் அரசு அழுத்​தம் கொடுப்​பது​போல் தெரி​கிறது.

இம்​ரான் கான் சிறை​யில் இருந்​தா​லும், அவரது செல்​வாக்கு தொடர்ந்து அதி​கரித்து வரு​கிறது. அவரது பிடிஐ கட்சி பாகிஸ்​தான் இளைஞர்​களிடம் வலு​வாக வேரூன்​றி​யுள்​ளது. அவரது கொள்கை பல தரப்​பினரை ஈர்த்​துள்​ளது.

பிடிஐ கட்​சிக்கு சிறந்த எதிர்​காலம் உள்​ளது. இம்​ரான் கான் சிறை​யில் இருக்​கும் படம் வெளிவந்​தால், அது மக்​களிடையே மிகப் பெரிய தாக்​கத்தை ஏற்​படுத்​தும் என்​ப​தால், அவரது போட்​டோவை வெளி​யிட பாகிஸ்​தான் அரசு அனு​ம​திக்​க​வில்​லை. இவ்​வாறு குர்​ராம்​ ஜீஷன்​ கூறி​னார்​.

சிறையில் இம்ரான்கான் உயிரோடு இருக்கிறார்: பிடிஐ கட்சி செனட் உறுப்பினர் குர்ராம் ஜீஷன் தகவல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வீடுகளைச் சுத்தம் செய்ய வீட்டுக்கு 10,000;விபரங்களுக்கு கிளிக் செய்யவும்

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்வதற்கு, ஒரு வீட்டுக்கு 10,000 வழங்கப்படும்....

பேலியகொடை பாலத்திற்கு கீழ் தற்போதைய நிலை

தொடர்ச்சியான சீரற்ற வானிலைக்கு மத்தியில் போலியகொட பாலத்திற்கு அருகில் தற்போதைய நிலைமைகள்..

டித்வா புயல் தாக்கம் – மரணங்கள் 355 ஆக அதிகரிப்பு

நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை...

ட்ரோன்களை பறக்கவிட வேண்டாம் – விமானப் படை

மீட்பு பணிகள் இடம்பெறும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ட்ரோன்களை பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு...