Date:

அபாயகரமான வெள்ள நிலைமை; ஹங்வெல்ல நிலைமை மோசம்

களனி கங்கை ஆற்றுப்படுகையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால், ஹங்வெல்ல மற்றும் அதனை அண்மித்த தாழ்நில பகுதிகளில் தற்போது உச்ச வெள்ள நிலைமை காணப்படுகிறது.

ஹங்வெல்ல அளவீட்டு நிலையத்தில் நீர் மட்டம் 9.78 மீட்டர் எனப் பதிவாகியுள்ளதுடன், இது ஏறக்குறைய ஒரு பெரும் வெள்ள நிலைமை என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

களனி கங்கை ஆற்றுப்படுகையின் நீர் மட்டம் அதிகரித்ததன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்வள முகாமைத்துவப் பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, நாகலகம் வீதியில் உள்ள அளவீடு 8.35 அடியாக காணப்படுவதுடன், இது அண்மைய வரலாற்றில் பதிவான அதிகபட்ச நீர் மட்டம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து நீர் மட்டம் அதே மட்டத்தில் காணப்படுவதாகவும், நீர் மட்டம் மேலும் அதிகரிக்கவில்லை என்றும் தெரிவித்த அவர், களனி விகாரைக்கு அருகில் அமைந்துள்ள வெள்ள அணையானது தற்போது திட்டமிடப்பட்ட நீர் மட்டத்தின் அதிகபட்ச உச்ச அளவை அடைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மரக்கறிகளின் விலைகள் கிடுகிடுவென உயர்வு

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் மொத்த விலைகள் சடுதியாக...

பலத்த மழைக்கு வாய்ப்பு

வடக்கு, மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா...

களனி கங்கையின் நீர்மட்டம் இன்னும் உயர்ந்தது

களனி கங்கையின் நீர்மட்டம் இன்னும் உயர்ந்தது

Breaking களனி கங்கையின் வெள்ள நீர் மட்டம் மேலும் அதிகரிப்பு

களனி கங்கையின் வெள்ள நீர் மட்டம் மேலும் அதிகரித்துள்ளது. நாகலகம் வீதிய பகுதியில்...