Date:

இது தேசத்தின் துயரம்..!

மிகுந்த வேதனையுடனும் கனத்த இதயத்துடனும் இச்செய்தியைப் பகிர்கிறோம்.

​நாட்டில் எதிர்பாராமல் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் கோரமான மண்சரிவுகளின் காரணமாக, இதுவரை நூற்றுக்கணக்கானோர் மரணத்தைத் தழுவியுள்ளனர்.

மேலும், பலர் காணாமல் போயுள்ள சோக நிகழ்வுகளும் நடந்துள்ளன.

​பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்து, வாழ்க்கையின் அனைத்து ஆதாரங்களையும் இழந்து, மிகவும் மோசமான, நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

​இந்நிலமை தாங்கமுடியாத துயரத்தை அளிக்கிறது. துயரில் ஆழந்துள்ள எமது நாடு, இந்தச் சோதனையில் இருந்து விரைவாகவும் வலிமையாகவும் மீண்டுவர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.

​இனம், மதம், மொழி, அரசியல் கட்சி என்ற எந்தவித வேறுபாடுகளுக்கும் அப்பால், நாம் அனைவரும் மனிதர்கள் என்ற உணர்வுடன், பாதிக்கப்பட்ட மக்களுடன் மக்களுக்காக என்றும் துயர் துடைக்கும் களத்தில் உறுதியாக நிற்போம்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலையும், மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்ஷா அல்லாஹ்,​மீண்டெழுவோம்!

 

​– MLAM ஹிஸ்புல்லாஹ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிபொருள் சதி | பேருவளை எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு முற்றுகை!

எரிபொருள் இல்லை எனக் கூறி அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்த...

காலி முகத்திடலில் உள்ள மின்கம்பமொன்றின் உச்சியில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நபர்.!

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர்...

ஜனாதிபதியின் தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15)...

இன்று முதல் வானிலையில் மாற்றம்

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை இன்று முதல் (15) குறைவடையும் என...