தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை மாற்றம் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் அபாயகரமான சூழ்நிலை நிலவுவதைக் கருத்தில் கொண்டு, முஸ்லிம் சமய மற்றும் பண்பாடுகள் திணைக்களம் அனைத்து அரபுக் கல்லூரிகளுக்கும் ஓர் அறிவித்தலைப் பிறப்பித்துள்ளது.
மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசிய நடவடிக்கைகள்
1. அபாயகரமான நிலைகளைக் கருத்தில் கொண்டு, அரபுக் கல்லூரிகளில் உள்ள மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2. மாணவர்களுக்கு விடுமுறை வழங்குவதாயின், அவர்களின் பாதுகாப்பான முறையில் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.






