கொழும்பு-காலி வீதியில் பெந்தோட்டை ஆற்றுக்குக் குறுக்கே அமைந்திருந்த, 123 ஆண்டுகள் பழமையான பெந்தோட்டை பழைய பாலம் இன்று (27) அதிகாலையில் நிலவிய மோசமான வானிலை காரணமாக இடிந்து விழுந்துள்ளது.
1902 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பாலம், பல ஆண்டுகளுக்கு முன்பே போக்குவரத்துக்காக மூடப்பட்டு, புதிய பாலம் பயன்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த பழைய பாலம் இடிந்து விழுந்ததில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.






