கண்டி – நுவரெலியா பிரதான வீதி கெரண்டியெல்ல பகுதியில் இன்று (26) பிற்பகல் முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகக் கொத்மலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கெரண்டியெல்ல பகுதியில் பிரதான வீதியில் பாரிய கற்கள் விழும் அபாயம் காரணமாகவே வீதி இவ்வாறு மூடப்பட்டுள்ளது.
தற்போதும் சில கற்கள் சரிந்து வீதிக்கு மேலாகக் காணப்படுவதுடன், மழையுடன் அக்கற்கள் வீதியில் விழும் அபாயம் உள்ளது.
அதற்கமைய, நுவரெலியாவிற்குச் செல்லும் வாகனங்கள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு கொத்மலை பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.






