Date:

யட்டியந்தோட்டை பட்ஜெட் தோற்றது

தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள யட்டியந்தோட்டை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 4 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது, பெருந்தோட்டப் பகுதி தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில் சபையில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

இதன்போது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 13 வாக்குகளும், எதிராக 17 வாக்குகளும் பதிவாகின.

ஆதரவாக வாக்களிப்பதில் தவிசாளர் உட்பட 12 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி (UNP), ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP), பொதுஜன ஐக்கிய முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, சர்வஜன அதிகாரம் (Sarvajana Balaya) மற்றும் சுயாதீன உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானில் உலகப் பாரம்பரியத் தளம் சேதம் – UNESCO கவலை!

யுனெஸ்கோ அமைப்பால் உலகப் பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்ட, தெஹ்ரானில் உள்ள...

போர் பதற்றத்தால் தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள்...

குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவின் தந்தை வழக்கறிஞர் எஸ்.கே. சங்கக்கார காலமானார். அவரது உடல்...

14 நாடுகளிலிருந்து அமெரிக்கர்கள் வெளியேற அவசர எச்சரிக்கை; ரியாத்திலுள்ள தூதரகத்தின் மீதும் தாக்குதல்

மத்திய கிழக்கின் 14 நாடுகளில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு...