Date:

நுகேகொட பேரணிக்கு திலித்திற்கு அழைப்பு

எதிர்க்கட்சிகளின் ஒரு பகுதியினர் இணைந்து எதிர்வரும் 21ஆம் திகதி நுகேகொடையில் நடத்தவுள்ள “மஹா ஜன ஹன்ட” (பெரும் மக்கள் குரல்) என்ற மக்கள் பேரணியில் கலந்துகொள்ளுமாறு, இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

 

இந்த அழைப்பை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சீ. தொலவத்த விடுத்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“இந்த அரசாங்கம் ஜனநாயகத்தைக் குறுக்கி, இவர்களுக்கு மாத்திரம் கூட்டங்கள் நடத்த முயற்சிக்கிறது. இவர்களுக்கு இருப்பது போல எங்களுக்கும் கூட்டங்கள் நடத்த உரிமை உண்டு. இந்த அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகள் குறித்து நினைவுபடுத்த எங்களுக்கு உரிமை உள்ளது.”

“குறிப்பாக நாங்கள் ஒன்றைக் கூற வேண்டும். இந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கொள்கை என்று எதுவுமில்லை. அவருக்கு அதிகாரம் தேவை என்றால், யாருடனும் இணைவார். இப்போது இவர்கள் எதிர்க்கட்சிக்காரர்களை ‘திருடர்கள், திருடர்கள்’ என்று கூச்சலிடும்போது, இவர்கள் இரகசியமாக உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரம் பெறுவதற்காக அன்று ‘திருடர்களாக’ இருந்தவர்களுடன் இணைந்து அதிகாரத்தை அமைத்தனர். இன்று வெளிப்படையாக வரவு செலவுத் திட்டத்தில் ஒன்றன்பின் ஒன்றாகத் தோற்கடிக்கிறார்கள். இது இரகசியமாக அதிகாரத்தைப் பெற்றதால் தான்.”

“இந்த அரசாங்கம் அதிகாரத்திற்காக எதையும் செய்யத் தயங்காது. நேற்று சீதாவக்கையில் நடந்ததை நாம் பார்த்தோம். சர்வஜன அதிகாரம் கட்சியின் உறுப்பினருக்குப் பணம் கொடுத்து அதிகாரத்தை அமைத்தனர். திலித் ஜயவீர இடதுசாரியைச் சேர்ந்தவர். அவரிடமும் கூறுகிறோம், காலம் கடத்தியது போதும். இந்த அரசாங்கம் எதையும் செய்யத் தயங்காது. தயவுசெய்து எங்களுடன் இணையுங்கள். சஜித் பிரேமதாசவுக்கும் எங்களுடன் இணைய நிறைய இடமுண்டு. அனைத்துத் தலைவர்களுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். இன்னும் இரண்டு நாட்கள் உள்ளன.”

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

323 கொள்கலன்கள் குறித்து விசாரிக்க பாராளுமன்றத் தெரிவுக்குழு

கட்டாய பௌதீக ஆய்வு இன்றி 323 கொள்கலன்களை விடுவித்தது குறித்து விசாரணை...

இரண்டு மலையக ரயில் சேவைகள் ரத்து

கொழும்பு கோட்டை மற்றும் பதுளை ரயில் நிலையங்களுக்கு இடையில் இயக்கப்படும் இரண்டு...

விசேட வைத்தியர்களுக்கான சட்ட வரைவைத் தயாரிக்கக் குழு

விசேட வைத்திய நிபுணர்களுக்கான சேவைச் சட்டத்தை வரைவு செய்வதற்காக சுகாதார மற்றும்...

திருமலை விஹாரை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருகோணமலை கோட்டை சாலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விஹாரைக்குச் சொந்தமான...