கொழும்பு கோட்டை மற்றும் பதுளை ரயில் நிலையங்களுக்கு இடையில் இயக்கப்படும் இரண்டு இரவு நேர தபால் ரயில்கள் இன்று (19) இரத்து செய்யப்படும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மலையக ரயில் பாதையில் ஒஹியா மற்றும் இதல்கஸ்ஹின்ன இடையேயான ரயில் பாதையில் ஏற்பட்ட பாறை மற்றும் மண் சரிவே இதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு இன்று இயக்கப்படும் இரவு நேர தபால் ரயில் மற்றும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு இயக்கப்படும் இரவு நேர தபால் ரயிலும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
ரயில் தடம் சீரமைக்கும் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அப்பணிகள் பூர்த்தியாகும் வரை இந்த இரத்து அமுலில் இருக்கும் என்றும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பயணிகள் மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.






