Date:

பேருவளை கடலில் மிதந்து வந்த 200 கிலோ பொதிகள் மீட்பு

பேருவளை கடற்கரையில் இருந்து சுமார் இரண்டரை கடல் மைல் தொலைவில் கடலில் மிதந்து வந்த இரண்டு பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்தப் பொதிகள் ஒவ்வொன்றும் சுமார் 100 கிலோகிராம் எடையுடையவை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவு மற்றும் இலங்கை கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போதே இந்தப் பொதிகள் மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட இந்தப் பொதிகளில் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருட்கள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

இவை கடலில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதால், கடல் மார்க்கமாக போதைப்பொருள் கடத்தல் முயற்சியொன்று தோல்வியடைந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கடும் மூடுபனியால் பாதிக்கப்பட்டும் மத்திய மலைநாட்டு மக்கள்!

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் நிலவும் கடும் மூடுபனி பல பகுதிகளில்...

வெனிசுலா ஜனாதிபதி நான் தான்! – ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தன்னை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...

யோக்கர் கின்ங் லசித் மாலிங்கவின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்த வனிந்து ஹசரங்க..!

சர்வதேச டி20 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இலங்கை வீரர்...

ஹரிணி பதவி விலகும் வரை தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்த விமல் வீரவங்ச!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச இன்று (12) முதல் தொடர்ச்சியான சத்தியாக்கிரக...