அம்பாறை திருக்கோவிலில் சுற்றுலாப்பயணியொருவரிடம் ஆணுறுப்பை காண்பித்த நபரொருவரின் காணொளி வைரலானதையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய 23 வயதான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுற்றுப்பயணமொன்றுக்காக இலங்கையை வந்தடைந்தை நியூசிலாந்துப் பிரஜையொருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்தே களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த சந்தேகநபர் தடுப்புக் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.
அறுகம்பேயிலிருந்து பாசிக்குடா செல்லும்போதே ஒக்டோபர் 25ஆம் திகதியே சம்பவம் இடம்பெற்றதாக பெண் தெரிவித்ததாக சுற்றுலஆ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.







