Date:

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – மேலும் இருவர் கைது

அண்மையில் கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் மேலும் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இந்தக் குற்றத்தைச் செய்ய துப்பாக்கிதாரி வந்த காரின் சாரதியாக இருந்தவர் என்றும், சந்தேகநபரான பெண், இந்தக் குற்றத்தைச் செய்ய சந்தேகநபர்களுக்குத் தங்குமிட வசதிகளை வழங்கியவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் சந்தேகநபருக்கு 27 வயது எனவும், அவர் கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், சந்தேகநபரான பெண்ணுக்கு 32 வயது எனவும், அவர் மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கத்தார் பாதுகாப்பு நிலை தொடர்பான சமீபத்திய தகவல்

கத்தார் தற்போது ஆரம்ப கட்ட அவசர நிலையை கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்....

10% இனால் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டுள்ள தாக்குதல்களைத் தொடர்ந்து...

ஈரான் தாக்குதலில் மூன்று அமெரிக்கப் படையினர் பலி

ஈரானை இலக்கு வைத்து ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது மூன்று அமெரிக்கப்...

எரிபொருள் விலை குறித்து OPEC+ அமைப்பு திடீர் தீர்மானம்!

அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல்கள் மற்றும் ஈரானின் பதிலடிகளால் மத்திய கிழக்கில்...