பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் 16 வீரர்கள் நாடு திரும்ப தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
இஸ்லாமாபாத்தில் நேற்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை அணியின் வீரர்களே இவ்வாறு நாடு திரும்ப முடிவு செய்துள்ளதாக குறிப்படப்படுகின்றது
அதேநேரம் நாளை நடைபெறும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியும் நடைபெறாது என ஶ்ரீலங்கா கிரிக்கெட் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் குறித்த தொடர் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்வதற்காக மாற்று அணியை அனுப்ப இலங்கை கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.






