நுகேகொடயில் எதிர்வரும் 21ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில், ஜக்கிய மக்கள் சக்தியினர் கலந்து கொண்டாலும் அதில் தான் பங்கேற்கப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
அரசாங்கத்திற்கு எதிராக எதிர்த்தரப்பினர் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளமைக்கு நாம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
கட்சி என்ற ரீதியில் தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. நான் கட்சியின் முகாமைத்துவக்குழு உறுப்பினராகவும் செயற்படுகின்றேன்.மத்திய குழு உறுப்பினராகவும் உள்ளேன்.
எனக்கு தெரிந்தவரையில் 21ஆம் திகதி நுகேகொட பேரணியில் ஜக்கிய மக்கள் சக்தி பங்கேற்க போவதில்லை என்ற தீர்மானமே எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் பின்னர் பேரணியில் பங்கேற்பதற்கு கட்சி ரீதியாக தீர்மானம் எடுக்கப்பட்டாலும் நான் அதில் பங்கேற்கமாட்டேன்.
நீதிமன்ற வழக்குகள் உள்ளவர்கள் அதேபோன்று விரைவில் சிறைக்கு செல்லும் நிலையில் உள்ள சிலருக்கு இந்த பேரணியை செய்வதற்கான அவசரம் உள்ளது.எமக்கு அவ்வாறு எந்த அவசரம் இல்லை.
அவர்களின் தேவைக்கேற்றவாறு செயற்படுதற்கு நாம் தயாரில்லை.






