அதற்கமைய, இந்த வழக்கை எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொடவத்த முன்னிலையில் இன்று(02) ஆராயப்பட்டது.
இதன்போது, குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் 30ம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.
வழக்கு விசாரணை இடம்பெறும் தினத்தன்று, பாதிக்கப்பட்ட சந்திப் சம்பத் குணவர்தன உள்ளிட்ட 6 பேரும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு மேலதிகமாக அவரது சாரதியான திலும் துஸித்த குமார மற்றும் வெலிக்கடை முன்னாள் காவல்துறை பொறுப்பதிகாரியும் உதவி காவல்துறை அத்தியட்சகருமான சுதஸ் அஸ்மடல ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.