இந்தியாவின் ஆதரவுடன் செயற்பட்ட பயங்கரவாதிகளே இஸ்லாமாபாத் தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த தாக்குதல் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற தடைசெய்யப்பட்ட போராளிக் குழுவுடன் தொடர்புடையது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த அமைப்பு, இந்தியாவின் வழிகாட்டுதலின் கீழ் ஆப்கானிஸ்தானில் இருந்து இயங்கியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், டெல்லி மற்றும் இஸ்லாமாபாத்தில் நடந்த குண்டுவெடிப்புகள் பாகிஸ்தான், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே பதற்றங்களை அதிகரித்துள்ளது.
இவ்வாறிருக்க, பாகிஸ்தான் இப்போது போர் நிலையில் இருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






