சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான வாசனைத் திரவியங்களை நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இன்று (10) ராஜகிரிய, கொத்தட்டுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதே இந்த வாசனைத் திரவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த வாசனைத் திரவியங்கள் டுபாயில் இருந்து நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது






