Date:

ஒரே நாளில் 1,000 இற்கும் அதிகமான சுற்றிவளைப்புக்கள்; 1,284 பேர் கைது

விஷப் போதைப்பொருட்களை நாட்டிலிருந்து அகற்றும் ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் கீழ், நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில், கடந்த தினத்தில் மாத்திரம் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (09) ஆயிரம் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் 1,284 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 7 கிலோ 21 கிராம் ஹெரோயினும், 4 கிலோ 715 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தவிர, ஹஷிஷ், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் உள்ளிட்ட மேலும் பல போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட 16 சந்தேகநபர்களுக்குத் தடுப்பு காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 15 பேர் புனர்வாழ்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 12,000 இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புனித ஹஜ் வழிகாட்டல் கருத்தரங்கு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் ஹஜ் உம்ரா குழு இணைந்து,...

டக்ளஸூக்கு 72 மணிநேர தடுப்புக்காவல்

கைதான முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேலும் விசாரிக்க 72 மணி...

பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட அறுவர் கைது

சீதுவையில் உள்ள இரவு விடுதி ஒன்றின் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல்...

வெடிகுண்டு அச்சுறுத்தல் பீதியை ஏற்படுத்தும்…

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கிடைத்த தகவல், பொதுமக்களிடையே பீதியை...