கஷ்டப் பிரதேச சேவையிலுள்ள ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் அதிபர்கொடுப்பனவுகளில் அதிகரிப்பு
கஷ்டப்பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் 20 ஆண்டுகளாக அதிகரிக்கப்படாதிருப்பதனால், அத்தகைய ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் இக் கொடுப்பனவை 1,500 ரூபாவால் அதிகரிப்பதற்கு நாம் முன்மொழிகிறோம்.
கல்வி இலக்குகளை அடைவதில் அதிபர்களின் நிர்வாகப் பொறுப்புகள் மற்றும் பொறுப்புகூறலை அங்கீகரிக்கும் வகையில், அதிபர் பதவியில் பணியாற்றும் அதிபர்களுக்கு வழங்கப்படும் அதிபர் கொடுப்பனவை 1,500 ரூபாவால் அதிகரிக்கவும் கல்வி இலக்குகளை அடைவதை அதிகரிப்பதற்காக ரூபா 1,000 மில்லியனை ஒதுக்கீடுசெய்யவும் நாம் முன்மொழிகிறோம்.






