தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதானல் அமைச்சர் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமக்கு எதிராக பாதாளக் குழுவொன்று கொலைச் சதித்திட்டம் தீட்டுவதாகவும் கொலை செய்ய முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமக்கான பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக அமைச்சர் பாதுகாப்புப் பிரிவிலிருந்து இரு அதிகாரிகளை நியமிக்குமாறு பாதுகாப்பு செயலாளருக்கு, ஞானசாார தேரர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
ராஜகிரியவில் அமைந்துள்ள தமது விஹாரைக்கு வருகை தந்த புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இந்த அச்சுறுத்தல்கள் குறித்து தகவல் வழங்கியதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தாம் தற்போது கடுமையான ஆபத்தில் இருப்பதாகவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நீண்டகாலமாக உருவாகியுள்ள உலகளாவிய தீவிரவாதத்துடன் தொடர்புடைய இஸ்லாமிய வன்முறைகள் குறித்து நான் பல்வேறு வெளிப்படுத்தல்கள் செய்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய முஸ்லிம் சமூகத்தினர் கடும்போக்கு இஸ்லாமிய தரப்புக்களினால் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகள் குறித்து தம்மிடம் கூறியதாகவும் அது குறித்த சில முக்கிய தகவல்களையும் வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.






