Date:

துப்பாக்கிகளை கோரிய 20 பாராளுமன்ற உறுப்பினர்கள்!

தமது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வழங்குமாறு சுமார் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக பாராளுமன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கோரிக்கையை பாராளுமன்றத் பிரதானிகளிடமும் பாதுகாப்பு தரப்பிடமும் முன்வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்தக் கோரிக்கைகள் தற்போது பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக அண்மையில் பொலிஸ் மாஅதிபரின் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்றும் நடத்தப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க சபாநாயகரும் பொலிஸ் மாஅதிபரும் இணக்கம் தெரிவித்திருந்தனர்.

எனினும், பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் துப்பாக்கிகளை வழங்க தீர்மானிக்கப்படவில்லை.

தற்போதைய அச்சுறுத்தல்கள் குறித்து மேற்கொள்ளப்படும் ஆய்வு ஒன்றின் பின்னரே, தகுதியானவர்களுக்கு துப்பாக்கிகளை வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புத்தளம் கடற்றொழிலாளர்களுக்கு கோடிகளில் அடித்த அதிர்ஷ்டம்

உடப்புவில் ஒரு வலையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வெண்கட பறவா...

நிந்தவூர், ஓட்டமாவடி தவிசாளர்கள் உறுப்புரிமையை இழந்தனர்

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் அகில இலங்கை மக்கள்...

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திகுத்து – 9 பேர் காயம்

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் ரயில் ஒன்றில் பயணித்த பயணிகள் மீது நடத்தப்பட்ட...

பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு

ரயில் ஒன்று தடம் புரண்டதால் பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு...