Date:

ரஜரட்ட பல்கலை பேராசிரியர்களின் வேலைநிறுத்தம் தீவிரம்

ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம், அண்மையில் ஆரம்பித்திருந்த அடையாள வேலைநிறுத்தத்தை, காலவரையற்ற வேலைநிறுத்தமாகத் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்கும் செயல்முறையானது தற்போது “குழப்பத்தில் இருந்து அதிக குழப்பத்தை” நோக்கிச் சென்றுள்ளதாக ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

இந்தச் செயல்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட அடையாள வேலைநிறுத்தமானது, தற்போதைய பதில் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரின் தன்னிச்சையான, சட்டவிரோதமான மற்றும் ஒழுக்கமற்ற நடவடிக்கைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, காலவரையற்ற வேலைநிறுத்தமாகத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

பல்கலைக்கழக நிர்வாக சபையின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, தற்போதைய பதில் துணைவேந்தரும் பதிவாளரும் இணைந்து, புதிய துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்களைக் கோரி செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட்டுள்ளனர்.

இந்தத் தன்னிச்சையான மற்றும் சட்டவிரோதமான நிர்வாகச் செயல்முறை உட்பட கடந்த சில மாதங்களில் நிகழ்ந்த பல்வேறு அரசியல் தலையீடுகளுக்குப் பின்னால் பதில் துணைவேந்தரே இருப்பதாகப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நிந்தவூர், ஓட்டமாவடி தவிசாளர்கள் உறுப்புரிமையை இழந்தனர்

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் அகில இலங்கை மக்கள்...

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திகுத்து – 9 பேர் காயம்

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் ரயில் ஒன்றில் பயணித்த பயணிகள் மீது நடத்தப்பட்ட...

பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு

ரயில் ஒன்று தடம் புரண்டதால் பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு...

பாதாள உலகக் குழுக்களினால் உயிராபத்து: விசேட பாதுகாப்பு கோரும் ஞானசார தேரர்

தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதானல் அமைச்சர் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு...