Date:

STC முன்னாள் தலைவர் கைது

இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹுஸைன் அஹமட் பஹிலா இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த கூட்டுத்தாபனத்திற்கு பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்யும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைப் பின்பற்றாமல், 2015 ஆம் ஆண்டில் 50 தற்காலிக களஞ்சியசாலைகள் (கொட்டகைகள்) இறக்குமதி செய்யப்பட்டதன் மூலம், கூட்டுத்தாபனத்திற்கு ரூ. 99,679,799.70 நட்டம் ஏற்படுத்தியமை மற்றும் வெளித்தரப்பினருக்கு அதே தொகைக்குச் சமமான இலாபத்தை வழங்கிய குற்றச்சாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (31) காலை 8.30 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் வைத்து இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் (State முன்னாள் தலைவர் கைது செய்யப்பட்டதுடன், சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிபொருள் விலைகளில் திருத்தம்

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய, இன்று (31) நள்ளிரவு 12.00...

அமைச்சரானார் மொஹமட் அசாருதீன்!

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான...

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக, உத்தியோகபூர்வ சுற்றுப்பயணம் என்ற போலிக்காரணத்தின்...

முன்னாள் ஜனாதிபதி ரணில் நீதிமன்றுக்கு..

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராவதற்காக முன்னாள்...