கொழும்பு மற்றும் பல பகுதிகளில் நாளை (23) 10 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இன்று அறிவித்துள்ளது.
அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்படும் மின் தடை காரணமாக நாளை காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என்று நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு 1-15, பத்தரமுல்ல, மிரிஹான, மடிவல, நுகேகொட, நாவல, கொலன்னாவை, ஐ.டி.எச், கொட்டிகாவத்தை, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்தை, மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.