போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அப்பட்டமாக மீறியுள்ளதாக ஹமாஸின் மூத்த உறுப்பினர் இஸ்ஸாத் அல் – ரிஷ்க் தெரிவித்துள்ளார்.
கட்டார் மற்றும் எகிப்து தலைமையிலான மத்தியஸ்த முயற்சிகளையும் தடம் புரளச் செய்யும் முயற்சியை இஸ்ரேல் முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, காசாவிற்கு உதவி வழங்குவதை இஸ்ரேல் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
காசாவிற்கு உதவி வழங்குவதை, மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார் .
ஹமாஸ் ஒப்பந்தத்தை வெளிப்படையாக மீறியதைத் தொடர்ந்து, அரசியல் பிரிவுகளின் உத்தரவுப்படி, காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்புவதை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தியுள்ளதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.