தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
4 வான்கதவுகள் 4 அடி அளவிலும், 2 வான்கதவுகள் 3 அடி அளவிலும் திறக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வான்கதவுகளில் இருந்து வினாடிக்கு 15,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதேவேளை இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் தலா 6 அடி அளவிலும் திறக்கப்பட்டுள்ளன.
அவற்றில் இருந்து நிமிடத்திற்கு மொத்தம் 7,800 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை அங்கமுவ குளத்தின் இரண்டு வான் கதவுகள் தலா ஐந்து அடிக்கு திறந்துவிடப்பட்டு வினாடிக்கு 2,994 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.