பாகிஸ்தான் எல்லைக்கு அருகே நடந்த வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, அடுத்த மாதம் பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் நடைபெறவிருந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை (ACB) அறிவித்துள்ளது.
நாட்டின் மூன்று உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள், பாகிஸ்தான் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து இந்த முடிவை எடுத்ததாக அந்நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) இதுவரை இந்த விவகாரத்தில் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.