அரச பொறியியல் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளர் நிலு தில்ஹார விஜேதாச இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற புனரமைப்பு பணிகளில் அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களை முறைக்கேடாக பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.