கொழும்பு – கிருலப்பனை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கொழும்பு மாநகரசபையின் 2 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த ஹோட்டல் இந்திய உணவுகளை விற்பனை செய்யும் இடமென தெரியவந்துள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.