சர்வதேச சைக்கிள் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்பதற்கு எதிரான போராட்டங்களால் சூழப்பட்ட இஸ்ரேல்-பிரீமியர் டெக் சைக்கிள் ஓட்டுதல் அணி, “இஸ்ரேலிய அடையாளத்திலிருந்து” விலகிச் செல்ல அதன் பெயரை மாற்றுவதாகக் திங்களன்று (06) கூறியது.
அதன்படி, அணியின் தற்போதைய இஸ்ரேலிய அடையாளத்திலிருந்து விலகி, அணியின் பெயரை மாற்றவும் மறுபெயரிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கனடிய-இஸ்ரேலிய கோடீஸ்வரர் சில்வன் ஆடம்ஸுக்குச் சொந்தமான அணி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உரிமையாளர் அணியிலிருந்து பின்வாங்குவார் என்றும் அறிக்கை மேலும் கூறியது.
இஸ்ரேல்-பிரீமியர் டெக் சைக்கிள் ஓட்டுதல் அணி, அண்மையில் பல பந்தயங்களில் பாலஸ்தீன ஆதரவு, இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டக்காரர்களால் மீண்டும் மீண்டும் குறிவைக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஸ்பெயினில் நடந்த வுல்டா எ எஸ்பானா போட்டியில், காசாவில் இஸ்ரேலின் போர் தொடர்பாக பாலஸ்தீன சார்பு போராட்டங்கள் நடத்தப்பட்டதால், இந்த அணி பல இடையூறுகளுக்கு மையமாக இருந்தது.
2026 சீசனில் இருந்து இஸ்ரேல் என்ற பெயர் நீக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக பிரீமியர் டெக் கடந்த மாதம் கூறியது.
இஸ்ரேல்-பிரீமியர் டெக் சைக்கிள் ஓட்டுதல் அணி 2014 இல் இஸ்ரேல் சைக்கிள் ஓட்டுதல் அகாடமியாக நிறுவப்பட்டது.
2022 முதல் கனேடிய நிறுவனமான பிரீமியர் டெக்கால் நிதியுதவி செய்யப்பட்டு வருகிறது.