Date:

மின்சார கட்டண திருத்தம் ; இறுதி தீர்மானம்

2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாவது மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக நடத்தப்பட்ட அமர்வுகளில் சுமார் 500 பேர் தமது யோசனைகளையும் பரிந்துரைகளையும் சமர்ப்பித்ததாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு, நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் இந்தக் கருத்து சேகரிப்பு நடவடிக்கைகள் செப்டம்பர் 18 ஆம் திகதி ஆரம்பமாகின.

இறுதி அமர்வு மேல் மாகாணத்தை மையமாகக் கொண்டு, நேற்று (08) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த அமர்வுகளில் முன்வைக்கப்பட்ட அனைத்து யோசனைகளையும் கருத்தில் கொண்டு, மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படவுள்ளது.

இதற்கிடையில், இலங்கை மின்சார சபை (CEB) சமீபத்தில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த தனது முன்மொழிவில், மின்சார கட்டணங்களை 6.8 சதவீதம் உயர்த்துவதற்கு பரிந்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அராம்கோ’ வை மூடியது சவுதி அரேபியா

ஈரானின் தொடர்ச்சியான பதில் தாக்குதல்கள் காரணமாக, சவுதி அரேபியாவின் அரசுக்குச் சொந்தமான...

அவசரகால நிலையை நீடித்து வர்த்தமானி வௌியீடு

இலங்கையில் பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்...

Breaking நெதன்யாகு அலுவலகத்தில் தாக்குதல்! நெதன்யாகு கதி என்ன?

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், நெதன்யாகு உயிருடன்...

இராணுவத் தளங்களை விட்டு விலகுமாறு ஈரானியர்களுக்கு எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் போர் நிலைமை மேலும் தீவிரமடையக் கூடும் என்ற அச்சம்...