இலங்கையில் டயலிசிஸ் ஊசிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொண்ட சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ, அரசு மருத்துவமனைகள் உள்ளூரில் கொள்முதல்களைச் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இதற்காக மருத்துவமனைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்