பாகிஸ்தானில் ஜாபர் விரைவு ரயில் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த வெடிகுண்டு தாக்குதலினால் 6 பெட்டிகள் தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
தண்டவாளத்தில் வெடிகுண்டு வைத்து விரைவு ரயில் வரும்போது வெடிக்கச் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ரயில் குவெட்டா நகருக்கு சென்று கொண்டிருந்த போது சிந்து – பலூசிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலர் காயமடைந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.