பிரான்ஸ் பிரதமர் ஜெபஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) 2025 செப்டம்பர் 9 ஆம் திகதி பிரான்சின் 47வது பிரதமராக பதவியேற்கப்பட்டு வெறும் 27 நாட்களே ஆகியுள்ள நிலையில் இவர் தனது பதவியை திடீரென இராஜினாமா செய்துள்ளார்.
அவர் பதவியை விட்டு இராஜினாமா செய்வதாக அறிவித்த சில மணி நேரங்களில் இந்த விலகல் அறிவிக்கப்பட்டாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவரின் திடீர் இராஜினாமா பிரான்ஸ் அரசியலில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் அவரது பதவி விலகலை ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பிரான்சின் அடுத்த பிரதமர் யாரை தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து, ஜனாதிபதி மேக்ரோன் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. புதிய பிரதமர் நியமனம் தொடர்பான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஓராண்டிற்குள் 4வது பிரதமாக தேர்ந்தெடுக்கப்பட்ட லெகுர்னு ராஜினாமா செய்துள்ளதால் பிரான்சில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.