திக்வெல்லவில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் நீச்சல் குளத்தில் விழுந்து 17 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன், பாடசாலை மைதானத்தில் சக மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது அதே பாடசாலையின் நீச்சல் குளத்தில் பந்து விழுந்த நிலையில், அதை எடுக்க முற்பட்டபோதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பதிகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து திக்வெல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.