ரக்பி வீரர் வாசிம் தாஜுதீன் உயிரிழக்கும் போது, அவரது வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற சந்தேகத்திற்கிடமான வாகனத்தில் கஜ்ஜா என்ற அனுர விதானகமகே இருந்ததாக கஜ்ஜாவின் மனைவி சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளித்திருந்தார்.
இதுகுறித்து அதிகாரிகள் காட்டிய சிசிடிவி காட்சிகளில் சந்தேகத்திற்கிடமான ஒரு நபரை அவர் அடையாளம் கண்டார்.
இருப்பினும், சந்தேகநபரான உயிரிழந்த கஜ்ஜாவின் 17 வயது மகன் ஊடகங்கள் மூலமாக தனது தாயின் வெளிப்படுத்தலை மறுத்து, அந்த சிசிடிவி காட்சிகளை தனது தந்தையின் உறவினர்களுக்குக் காட்டி, இந்த விடயத்தை ஏன் விசாரிக்கவில்லை என பொலிஸாரிடம் கேட்டார்.
இருப்பினும், இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், ரக்பி வீரர் வாசிம் தாஜுதீனின் காரைத் பின் தொடர்ந்த ஜீப்பில் பயணித்தவர் கஜ்ஜா என்கிற அனுர விதானகமகே என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கஜ்ஜாவின் மகனின் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் எதிர்காலத்தில் கஜ்ஜாவின் மகனிடமிருந்து வாக்குமூலம் பெறப்படும் எனவும் அத்துடன் எதிர்காலத்தில் கஜ்ஜாவின் உறவினர்களிடமிருந்தும் வாக்குமூலங்கள் பெறப்படும் எனவும் , தாஜுதீனின் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் அவர்களுக்குக் காட்டப்படும் எனவும் , அங்கு இருக்கும் மற்றொரு நபர் மித்தெனியவைச் சேர்ந்த கஜ்ஜாவா என்று கேட்டறிப்படவுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.