திருமணமாகாத பெண்மணி என்ற வகையில் பிரதமர் ஹரினி அமரசூரிய உங்களுக்கு பிள்ளைகளின் எதிர்கால கனவு மற்றும் எமது நாட்டின் பாரம்பரிய கலாசாரம் தொடர்பாக எமக்கிருக்கும் வேதனை உமக்கு தெரியாது என ஜனசெத்த பெரமுனவின் தலைவர் சீலரத்தின தேரர் தெரிவித்துள்ளார்.
கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
நீங்கள் நாட்டின் கலாசாரத்தை மாற்றுவதாக கூறுகிறீர்கள்,புதிய கலாசாரத்தை உருவாக்குவதாக சொல்லுகிறீர்கள்.ஏன் உங்களுக்கு தெரியாதா?இந்நாட்டின் பராம்பரிய கலாசாரம் ஒன்றுள்ளது.
உங்கள் சிறு பராயத்தில், இது தொடர்பிலான அறிவு உங்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும்.உங்களுக்கு பிள்ளைகள் இல்லை.எனது பிள்ளை எங்கு படிப்பது,தனது கணவர் எப்படி இருக்க வேண்டும் என்ற விடயங்கள் உங்களுக்கு புரியாது.