Date:

வெற்றோரியின் இடத்திற்கு ஹேரத்

பங்களாதேஷின் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராக, நியூசிலாந்தின் முன்னாள் அணித்தலைவர் டேனியல் வெற்றோரியைப் பிரதியிடுவதில் இலங்கையின் முன்னாள் வீரர் ரங்கன ஹேரத் முன்னிலையிலுள்ளார்.

குறித்த தகவலை பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் நடவடிக்கைத் தலைவர் அக்ரம் கான் உறுதிப்படுத்தியுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக பங்களாதேஷுடன் சீராக வெற்றோரி இணைய முடியாத நிலையில் பங்களாதேஷின் சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளர் பதவி வெற்றிடமாகவுள்ளது.

இந்தியாவின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் சாய்ராஜ் பதுகுலே, பாகிஸ்தானின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் சயீட் அஜ்மல் ஆகியோரே பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் பட்டியலிலுள்ள மற்றைய இரண்டு போட்டியாளர்களென்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பங்களாதேஷ் கிரிக்கெட் சபையுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நுவரெலியாவிலிருந்து கொழும்பு சென்ற மரக்கறி மலை!

கொழும்பில் ஏற்பட்ட பெரும் தேவையைத் தொடர்ந்து, நேற்று நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து...

பயணத்தை இலகுவாக்கப் புதுப்பிக்கப்பட்ட Google Map!!

வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து Google Map A மற்றும்...

16 ஆம் திகதி ஆரம்பிக்க முடியாத பாடசாலைகள்!

16 ஆம் திகதி ஆரம்பிக்க முடியாத பாடசாலைகளின் பட்டியல் இதோ.. ...

இலங்கை வந்த ரஷ்யா உதவி விமானம்!

நாட்டைப் பாதித்த சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட இலங்கைப் பொதுமக்களுக்கு நிவாரணம்...