ராகமயிலிருந்து ஜா-எல முனை வரைக்கும் பிரீமா மாவு ஏற்றிச் சென்ற ரயில் ரயில் ஜா-எல அருகில் வியாழக்கிழமை (02) அன்று தடம் புரண்டதால், புத்தளம் பாதையில் ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.
தண்டவாளங்களை அகற்றி இயல்பு நிலை நடவடிக்கைகளை மீட்டெடுக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
சேவைகள் முழுமையாக மீட்டெடுக்கப்படும் வரை அந்த பாதையில் ரயில் சேவைகள் தாமதமாகும் என்று ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.