தங்காலை சீனிமோதர பகுதியில் மூன்று லொறிகளில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய “பெலியத்தே சனா” என்ற சந்தேகநபரை நேற்று (01) கைதுசெய்துள்ளதாக தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்
வெளிநாட்டிலிருந்து இந்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 700 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள், தங்காலை பகுதியில் சமீபத்தில் பொலிஸாரால் மீட்கப்பட்டன.
“உனாகுருவே சாந்த” என்ற வெளிநாட்டு போதைப்பொருள் கடத்தல்காரருக்கு சொந்தமானதாகக் கூறப்படும் இந்த போதைப்பொருள் தொகையை இந்நாட்டில் விற்பனைக்காக கொண்டு வந்த சந்தேக நபர்களைக் கைது செய்ய, பொலிஸார் தொடங்கிய விசேட நடவடிக்கையின் மூலம் “பெலியத்தே சனா” என்ற நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவர், இக்கடத்தலில் முக்கிய சந்தேக நபரான “பூமிதெலா”வின் நெருங்கிய நண்பரென கூறியுள்ளனர். அத்துடன், கடத்தல்காரர்கள் போதைப்பொருட்களை மறைத்து வைத்திருப்பதாகக் கூறப்படும் மற்றொரு வீட்டையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.