Date:

டிங்கரை 24 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான டிங்கர் என அழைக்கப்படும் ஸ்ரீதரன் நெரஞ்சனை 24 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு குற்றப்பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

 

புளூமெண்டலைச் சேர்ந்த 36 வயதான சந்தேகநபர் நேற்று (1) காலை டுபாயில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.

 

சந்தேகநபர் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான கொச்சிக்கடை ஷிரான் என அழைக்கப்படும் பழனி ஷிரான் க்ளோரியனின் உதவியாளர் என கண்டறியப்பட்டுள்ளது.

 

2024ஆம் ஆண்டில் கிரேண்ட்பாஸிலுள்ள மஹவத்த பொதுமயானத்திற்கு அருகில் முச்சக்கர வண்டியில் இருந்த நபரை துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்த சம்பவத்திற்கு சந்தேகநபர்கள் வந்த காரின் சாரதியாக செயற்பட்டமை, பேலியகொடை ஸ்ரீ ஞானரத்ன மாவத்தையில் ஒருவரை சுட்டுக் கொலை செய்து மற்றும் மற்றொருவருக்கு காயமேற்படுத்தியமை, சந்தேகநபர்களுக்கு துப்பாக்கிகளை பரிமாற்றியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகநபருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை (Fuel Pass) பெறுவது எப்படி?

எரிபொருள் அனுமதிப்பத்திரத்தைப் பதிவு செய்ய, கீழுள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்: 1.இணையதளத்திற்குச் செல்லுங்கள்:...

Breaking ஞாயிறு (15) முதல் அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் QR முறைப்படி எரிபொருள் விநியோகம்!

ஞாயிறு (15) முதல் அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் QR முறைப்படி எரிபொருள்...

Breaking ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக தமது கப்பல்களை அனுப்பி ஒத்துழைக்குமாறு சீனா,...

ஈரான் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் தொலைபேசி உரையாடல்

ஈரான் வெளிவிவகார அமைச்சர் செய்யித் அப்பாஸ் அராக்சி (Seyed Abbas Araghchi),...