பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் இன்று (30) முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைக்கழக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வை பெற்றுக்கொடுக்கவில்லை எனத் தெரிவித்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க சம்மேளனம் இன்று அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றது.
இதன் காரணமாக, பல்கலைக்கழகங்களின் விரிவுரைகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் நாட்டில் இருந்து வௌியேறிய பின்னணியில் காணப்படும் வெற்றிடங்களை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்காமை, சம்பளப் பிரச்சினை, ஆராய்ச்சிக்கான நிதி பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வு கோரி இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.