Date:

அமல் சில்வாவுக்கு பிணை

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட 60 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 3 சொகுசு வாகனங்களுடன் வலானை ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

பாணந்துறை நீதவான் நீதிமன்றம் இன்று (29) இந்த பிணை உத்தரவை பிறப்பித்துள்ளது.

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான 3 சொகுசு வாகனங்களுடன், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா, வலானை ஊழல் தடுப்புப் பிரிவினரால் நேற்று (28) கைது செய்யப்பட்டார்.

இந்த வாகனங்கள் சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் போலி எண்களில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதன்போது லேண்ட் ரோவர் மற்றும் மிட்சுபிஷி ஜீப் வகைகளை சேர்ந்த 3 வாகனங்களும் மீட்கப்பட்டன.

பொலிஸார் நடத்திய ஆரம்ப விசாரணையில், இந்த வாகனங்கள் போலி ஆவணங்களுடன் அரசு நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களின் பதிவு எண்களில் பதிவு செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச செயலகங்களுக்குப் பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் ஊடாக,...

ரூ. 10,000 இற்கு மேல் பொருட்கள் வாங்கினால் காப்புறுதி இலவசம்!

கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஒரு மாதத்திற்குள் 10,000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்களைக்...

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி அன்பளிப்பு

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும்...

இலவங்கப்பட்டை ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டு 260 மில்லியன் டொலர் வருமானம்

இலவங்கப்பட்டை தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் கடந்த ஆண்டில் 260 மில்லியன்...